LATEST NEWS
“மகளிருக்கு அடித்தது ஜாக்பட்!”… குழந்தைகளுக்கு இதைச் செய்தாலே ரூ.5000… அன்புமணி ராமதாஸ் அறிவித்த மாஸ் பட்ஜெட்..!!
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 2026-27-ஆம் நிதியாண்டிற்கான பாமகவின் நிழல் பட்ஜெட்டை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் பார்வைக்காகவும் செயல்பாட்டுக்காகவும் மொத்தம் 341 சிறப்பு யோசனைகள் இதில் முன்வைக்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்குத் தனித்தமிழில் பெயர் சூட்டும் தாய்மார்களுக்கு ₹5,000 பரிசுத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு இதில் முக்கியக் கவனத்தைப் பெற்றுள்ளது.
மேலும், சமூக முன்னேற்றம் மற்றும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு வரும் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பரிந்துரைகளும் இந்த நிழல் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன. மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்தவும், நிர்வாகச் சீர்திருத்தங்களைக் கொண்டு வரவும் உதவும் பல தொலைநோக்குத் திட்டங்களை உள்ளடக்கிய ஆவணமாக இது தயாரிக்கப்பட்டுள்ளது.
