“நம்பவே முடியல…! 16 வயசுல கோபப்பட்டு வீட்டை விட்டு ஓடுன பையன்… 23 வருஷம் கழிச்சு அம்மாகிட்ட எப்படி சேர்ந்தான் தெரியுமா..?!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நம்பவே முடியல…! 16 வயசுல கோபப்பட்டு வீட்டை விட்டு ஓடுன பையன்… 23 வருஷம் கழிச்சு அம்மாகிட்ட எப்படி சேர்ந்தான் தெரியுமா..?!”

Published

on

கோவையில் இருந்து 16 வயதில் வீட்டை விட்டு வெளியேறிய மகனை, 23 ஆண்டுகள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவரது தாய் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய அந்த சிறுவன், பஞ்சாப் மாநிலத்தில் கொத்தடிமை தொழிலாளியாக சிக்கியதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக தனது மகனை தேடி வந்த தாய், அவரை மீட்க தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.


இதற்கிடையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உதவி மற்றும் சண்டிகரில் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன், அந்த நபர் மீட்கப்பட்டதாக அவரது தாய் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
23 ஆண்டுகளுக்குப் பிறகு தனது மகனை மீண்டும் பார்த்த தருணம் மிகுந்த உணர்ச்சிகரமாக இருந்ததாகவும், பல ஆண்டுகளாக இருந்த வேதனை தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


தாயின் விடாமுயற்சி மற்றும் அதிகாரிகள், தொண்டு நிறுவனத்தின் உதவியால் குடும்பத்துடன் மீண்டும் இணைந்த இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி, பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றன.குடும்ப உறவுகளின் பாசத்தையும், பிரிந்தவர்களை மீண்டும் இணைக்கும் மனிதநேய முயற்சிகளின் முக்கியத்துவத்தையும் இந்த சம்பவம் எடுத்துக்காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in