“இப்படி ஏமாத்த எப்படி மனசு வந்துச்சு..?” பெட்ரோல் போட்ட அடுத்த செகண்ட் பெண் செய்த பகீர் காரியம்.. அதிர்ச்சியில் ஊழியர்… நெட்டிசன்களைக் கொந்தளிக்க வைத்த வைரல் வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“இப்படி ஏமாத்த எப்படி மனசு வந்துச்சு..?” பெட்ரோல் போட்ட அடுத்த செகண்ட் பெண் செய்த பகீர் காரியம்.. அதிர்ச்சியில் ஊழியர்… நெட்டிசன்களைக் கொந்தளிக்க வைத்த வைரல் வீடியோ..!!

Published

on

செல்போனில் பேசியபடியே காரில் எரிபொருள் நிரப்பக் காத்திருந்த பெண் ஒருவர், டேங்க் நிரம்பியதும் பணத்தைச் செலுத்தாமல் காரை மின்னல் வேகத்தில் எடுத்துச் சென்று தப்பித்த சம்பவம் இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊழியர் பெட்ரோல் நிரப்பி முடித்த அடுத்த நொடியே, எதிர்பாராத விதமாக அப்பெண் காரை வேகமாக இயக்கிச் சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கவனக்குறைவாகவோ அல்லது திட்டமிட்டோ செய்யப்பட்ட இந்த அசாட்டையான செயலால் ஆத்திரமடைந்த நெட்டிசன்கள், உழைக்கும் ஊழியரை ஏமாற்றிய அப்பெண்ணின் நன்னடத்தையற்ற நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்துத் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

😡 What this Girl did might make your Blood Boil,

A girl arrived at a petrol station to refuel her car. While waiting, she stayed busy talking on the phone. The attendant then filled up her fuel tank. But the moment the tank was full, no one could have imagined what would happen… pic.twitter.com/VbNN2rcN6L— Amisha Uncut (@RoyalCheckOut) July 30, 2026

ஒருவேளை இது உண்மை என்றால், இதனால் மிகப்பெரிய இழப்பைச் சந்திப்பது அந்த எளிய பெட்ரோல் பங்க் ஊழியர்தான். ஏனெனில், அப்பெண் ஏமாற்றிய அந்தப் பணத்தை அந்த ஊழியர் தனது சொந்தச் சம்பளத்திலிருந்துதான் செலுத்த வேண்டியிருக்கும். விலை உயர்ந்த கார் வைத்திருப்பதால் மட்டும் ஒருவர் சிறந்த மனிதராகிவிட முடியாது; ஒருவரின் உண்மையான குணத்தை அவரது நேர்மையும், பிறரிடம் அவர் நடந்துகொள்ளும் விதமுமே வெளிப்படுத்தும். சிறுகச் சிறுக உழைத்து வாழும் ஒரு ஏழையின் வயிற்றில அடிப்பதை விடப் பெரிய அநீதி வேறு எதுவும் இருக்க முடியாது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in