“என்னோட உயிருக்கு ஆபத்து” துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேணும்… மதுரை எஸ்பியிடம் தவெக எம்எல்ஏ விஜய் பரபரப்பு மனு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என்னோட உயிருக்கு ஆபத்து” துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேணும்… மதுரை எஸ்பியிடம் தவெக எம்எல்ஏ விஜய் பரபரப்பு மனு..!!

Published

on

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் விஜய், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். தமக்குத் துப்பாக்கி ஏந்திய தனிப்பட்ட காவல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அவர் மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்துப் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

பொதுமக்களின் குறைகளைக் கேட்கும் நிகழ்வுகளைத் தாம் நடத்தும்போது, ஒரு சில சமூக விரோதக் கும்பல்கள் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்த முயற்சிப்பதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், பழைய முன்விரோதம் மற்றும் தற்போதைய அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத் தமக்கு எதிராகப் பல்வேறு சூழ்ச்சிகள் மற்றும் சதித்திட்டங்கள் மறைமுகமாக நடைபெற்று வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

தமக்கு மட்டுமன்றி, தனது குடும்பத்தினர், ஆதரவாளர்கள் மற்றும் தங்களின் உடைமைகளுக்கும் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் நிலவி வருவதாகத் தவெக எம்எல்ஏ விஜய் கவலை தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் மாவட்டக் காவல்துறை உடனடியாகத் தலையிட்டுத் தகுந்த விசாரணை நடத்தி, அச்சுறுத்தலில் இருந்து தமக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in