CINEMA
பயத்துல அப்பாவ போயி கட்டிப்பிடிச்சேன்…. அன்னைக்கு நடந்த விஷயம்… பொதுவெளியில் ஓபனான சொன்ன ஜேசன் சஞ்சய்..!!!
வேட்டைக்காரன் படத்தின் ‘நான் அடிச்சா தாங்க மாட்ட’ பாடல் படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை சஞ்சய் தனது பேட்டியில் பகிர்ந்துள்ளார். அப்பாடலுக்கான ஒத்திகையின் போது இயக்குநர் ‘ஆக்ஷன்’ என்று கூறியதும், எதிர்பாராதவிதமாகத் தான் பயந்துவிட்டதாகவும், உடனே ஓடிச்சென்று தனது அப்பா விஜய்யை கட்டிப்பிடித்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது தானும் ஒரு இயக்குநராக மாறியுள்ள நிலையில், அன்றைய நிகழ்வை நினைத்துப் பார்ப்பதாக நெகிழ்ச்சியுடன் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபகாலமாக விஜய்யும் அவரது மகன் சஞ்சய்யும் பிரிந்து வாழ்வதாக இணையத்திலும் ஊடகங்களிலும் பல்வேறு வதந்திகளும் செய்திகளும் உலா வந்தன. இந்நிலையில், தந்தையுடனான தனது பாசத்தையும் பழைய நினைவுகளையும் சஞ்சய் நெகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்ட இந்த பேட்டி, பரவி வந்த அத்தனை வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைந்துள்ளது.
