LATEST NEWS
அதிமுக – பாஜக கூட்டணி க்ளோஸ்..? “இனிமே நாங்க தனிச்சுதான் போட்டி…” நயினார் நாகேந்திரன் கொடுத்த செம ஷாக்..!!
தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன், இனிவரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் என அனைத்திலும் பாஜக தனித்துப் போட்டியிட உள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இதன்மூலம் அதிமுக கூட்டணியில் பாஜக நீடிக்கவில்லை என்பதை அவர் சூசகமாக உறுதிப்படுத்தியுள்ளார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தல் முதலே இரு கட்சிகளுக்கும் இடையே நிலவி வந்த பனிப்போர், தற்போது இந்த அறிவிப்பின் மூலம் அதிகாரப்பூர்வமாக கூட்டணி முறிவை நோக்கி நகர்ந்துள்ளதை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.
ஏற்கெனவே அதிமுக கூட்டணியில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா), புரட்சி பாரதம் உள்ளிட்ட முக்கிய கூட்டணிக் கட்சிகள் அடுத்தடுத்து வெளியேறிவிட்ட நிலையில், தற்போது பாஜகவும் விலகியிருப்பது அதிமுக முகாமிற்குப் பலத்த பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழலில், பலமுனைப் போட்டிகள் உருவாகி வருவதால், பாஜகவின் இந்தத் தனித்துப் போட்டியிடும் முடிவு வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மற்ற கட்சிகளின் வாக்கு வங்கியை எவ்வாறு பாதிக்கப் போகிறது என்ற விவாதத்தை அரசியல் வட்டாரத்தில் தீவிரமாக்கியுள்ளது.
