மக்களோட இதயத்துல எங்க தலைவரு இருந்தாரு.. ஆனா ஓட்டு போடுற நேரத்துல இந்த சின்ன பசங்க குறுக்க புகுந்துட்டாங்க… திமுக ரகுபதியின் வினோத பேச்சை கேட்டு சிரிப்பை அடக்க முடியாமல் தவித்த முதலமைச்சர் விஜய்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மக்களோட இதயத்துல எங்க தலைவரு இருந்தாரு.. ஆனா ஓட்டு போடுற நேரத்துல இந்த சின்ன பசங்க குறுக்க புகுந்துட்டாங்க… திமுக ரகுபதியின் வினோத பேச்சை கேட்டு சிரிப்பை அடக்க முடியாமல் தவித்த முதலமைச்சர் விஜய்..!!

Published

on

“தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் எங்கள் தலைவரை இருக்கச் செய்துள்ளோம்; ஆனால் ஓட்டுப் போடும் நேரத்தில் மட்டும் சின்னக் குழந்தைகள் குறுக்கில் புகுந்து வாக்குகள் மாறிவிட்டது” என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி சட்டப்பேரவையில் பேசிய விசித்திரமான கருத்து அங்கிருந்தவர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தேர்தல் தோல்விக்கான காரணத்தை விவரிக்கும் நோக்கில், முன்னாள் அமைச்சர் ரகுபதி அவையில் இவ்வாறு மழுப்பலாகப் பேசிய விதம் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

தோல்விக்குக் குழந்தைகளைக் காரணமாகக் காட்டிய ரகுபதியின் இந்த வினோதமான பேச்சைக் கேட்டவுடன், அவையிலிருந்த தமிழக முதலமைச்சர் விஜய் தனது சிரிப்பை அடக்க முடியாமல் முகத்தை மூடிக்கொண்டு வெளிப்படுத்திய ரியாக்‌ஷன் தற்பொழுது அரசியல் வட்டாரங்களில் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பொறுப்பான சட்டமன்றக் கூட்டத்தொடரில் தோல்விக்குச் சுயபரிசோதனை செய்யாமல், மிகவும் பலவீனமான ஒரு காரணத்தை முன்வைத்து திமுக உறுப்பினர் பேசியது ஆளுங்கட்சியினரையும், அங்கிருந்த பிற எதிர்க்கட்சியினரையும் ஒருசேரச் சிரிக்க வைக்கும் வகையில் அமைந்திருந்தது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in