“வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்..! இனி ஸ்கேன் பண்ண முடியாது.. கேஷ் கையில் வச்சுக்கோங்க..!” தமிழக பெட்ரோல் பங்குகளில் வரப்போகும் திடீர் மாற்றம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்..! இனி ஸ்கேன் பண்ண முடியாது.. கேஷ் கையில் வச்சுக்கோங்க..!” தமிழக பெட்ரோல் பங்குகளில் வரப்போகும் திடீர் மாற்றம்..!!

Published

on

தமிழகத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் UPI, Google Pay உள்ளிட்ட டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை நிறுத்தப் பெட்ரோலிய வணிகர் சங்கம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற மணி மியூல் நிதி மோசடி தொடர்பாக 800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த டிஜிட்டல் பரிவர்த்தனை மோசடிகளால் பெட்ரோலிய வணிகர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் ஏற்படும் இத்தகைய மோசடிகளைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே பெட்ரோல் பங்குகளில் டிஜிட்டல் சேவைகளை நிறுத்தும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக பெட்ரோல் பங்குகளில் ரொக்கப் பணப் பரிவர்த்தனை மீண்டும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதோடு, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இது தொடர்பாக பல்வேறு விவாதங்கள் கிளம்பியுள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in