LATEST NEWS
“பயமா..? அப்படின்னா என்ன…? இதெல்லாம் எனக்கு தினமும் நடக்குற சாதாரண விஷயம்தான்…!” 300 கிலோ சிங்கங்கள் நடுவே கூலாக உலா வந்த நபர்…! வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு லயன் சபாரி பூங்காவில் எடுக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டிராவல் கன்டென்ட் கிரியேட்டரான சைமன் வில்சன் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், ஒரு கார் வழிகாட்டி எவ்வித ஆயுதமோ அல்லது பாதுகாப்போ இன்றி 300 கிலோ எடையுள்ள கொடூரமான சிங்கங்களுக்கு இடையே பயமின்றி சாதாரணமாக நடமாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. காரில் பாதுகாப்பாகப் பூட்டி வைக்கப்பட்டுள்ள சைமன் வில்சன், அந்த வழிகாட்டியின் தைரியத்தையும் சிங்கங்களுடன் அவருக்கு இருக்கும் விசித்திரமான பிணைப்பையும் கண்டு வியப்பில் உறைந்துபோனார்.
வீடியோவின் தொடக்கத்தில், காரின் கதவுக்கு வெளியே ஒரு கொடூரமான பெண் சிங்கம் சுற்றிக் கொண்டிருக்கும்போது, வழிகாட்டி காரைத் திறந்து வெளியேற முயல்கிறார். இதைப் பார்த்துப் பதறிய சைமன், “வெளியே சிங்கம் இருக்கிறது, தயவுசெய்து இறங்காதீர்கள்!” எனக் கூறுகிறார். அதற்கு அந்த வழிகாட்டி புன்னகையுடன், “இதுதான் என் வேலை, இது எனக்கு தினமும் நடக்கும் சாதாரண விஷயம்தான்” என்று பதிலளிக்கிறார். சிங்கங்களுக்குத் தேவையான மருந்துகளைத் தெளிக்கவும், அவற்றைப் பராமரிக்கவும் அவர் பயமின்றி அவற்றுக்கு இடையே செல்கிறார். மேலும், அங்குள்ள 250 கிலோ முதல் 300 கிலோ வரை எடையுள்ள சிங்கங்களில் ஒன்றைக் கேலியாக ‘டொனால்ட் ட்ரம்ப்’ என்றும் அழைத்து விளையாடுகிறார்.
https://www.instagram.com/reel/DbYldIxIE77/?utm_source=ig_web_button_share_sheet
இந்த பூங்காவில் காரை விட்டு வெளியேறுவது என்பது நேரடியாக மரணத்தை வரவேற்பதற்குச் சமம் என்று உரையாடலின் போது அந்த வழிகாட்டி கூறுகிறார். ஏனெனில், சிங்கங்கள் வெறும் 6 வினாடிகளில் 100 மீட்டர் வேகத்தை எட்டக்கூடியவை என்பதால், அவற்றிடமிருந்து ஓடித் தப்பிப்பது சாத்தியமற்றது. இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்த சைமன் வில்சன், அந்த வழிகாட்டியின் இந்தப் பணியை “உலகின் மிக ஆபத்தான வேலை” என்று குறிப்பிட்டுள்ளார்.
