LATEST NEWS
“நான் சாப்பிடலனா என்ன, என் அம்மாவுக்கு போதும்..!” இணையத்தை கலங்க வைத்த சிறுவனின் வார்த்தைகள்.. மும்பை சிக்னலில் அரங்கேறிய நெகிழ்ச்சிச் சம்பவம்..!!
மும்பை விமான நிலையத்திலிருந்து கார் மூலம் பயணித்த பெண் ஒருவர், சிக்னலில் நின்றுகொண்டிருந்தபோது பெனா்களை விற்க முயன்ற சிறுவன் ஒருவனின் பரிதாப நிலையைக் கண்டு காரை நிறுத்தச் சொன்னதுடன், பசியுடன் இருந்த அவனிடம் விசாரித்து அவனுக்கு உணவளிக்க அருகில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார்; அப்போது தான் சாப்பிடுவதை விட நோய்வாய்ப்பட்ட தனது தாயுடன் சேர்ந்து சாப்பிடுவதற்காக உணவைப் பொட்டலமாகக் கேட்ட அந்தச் சிறுவனின் பாசமும், தன் குடும்பத்தின் மீதான அக்கறையும் அந்தப் பெண்ணின் நெஞ்சை நெகிழச் செய்தது.
A woman was traveling by cab from Mumbai Airport when the car stopped at a traffic signal.
A young boy approached the window and repeatedly gestured, asking her to buy some pens. Before she could respond, the driver started moving the car forward.
The woman immediately said,… pic.twitter.com/nsaywyRmOv— Aradhya (@ItsAradhya__) August 14, 2026
சிறுவனின் குடும்பத்திற்காகப் போதுமான உணவை வாங்கித் தந்து பணமும் உதவிய அந்தப் பெண், அவனிடம் இருந்த பெனா்களை வாங்க மறுத்து அன்புடன் அவனிடமே வைத்துக் கொள்ளச் சொல்ல, அந்தச் சிறுவன் கைகளைக் கூப்பி நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றான்; நடந்த நிகழ்வுகளை வெளியே காத்திருந்து பார்த்த ஓட்டுநர், அந்தப் பெண்ணின் இரக்கத்தைக் கண்டு மனம் நெகிழ்ந்து நன்றி கூறியதுடன், மனிதநேயத்திற்கு எப்போதுமே பெரிய செயல்கள் தேவையில்லை, சரியான நேரத்தில் வெளிப்படும் சிறிய கருணையே எல்லாவற்றையும் விடப் பெரியது என்ற உண்மையை இந்நிகழ்வு உணர்த்தியுள்ளது.
