“கூட்டத்துல ஜான் ஆரோக்கியசாமியும் இல்ல… விஷ்ணு ரெட்டியும் இல்ல…!அமைச்சர்கள் மட்டும்தான் இருந்தோம்..!” வதந்திகளுக்கு அமைச்சர் வன்னி அரசு காரசார பதில்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கூட்டத்துல ஜான் ஆரோக்கியசாமியும் இல்ல… விஷ்ணு ரெட்டியும் இல்ல…!அமைச்சர்கள் மட்டும்தான் இருந்தோம்..!” வதந்திகளுக்கு அமைச்சர் வன்னி அரசு காரசார பதில்..!!

Published

on

தமிழக அமைச்சரவை கூட்டத்தில் வெளியாட்கள் யாரும் பங்கேற்கவில்லை என்று அமைச்சர் வன்னி அரசு விளக்கமளித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற போது தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கூட்டத்துக்கான நிகழ்ச்சி நிரலை வாசித்துவிட்டு வெளியேறிவிட்டனர் என்றும், அதன் பின்னர் அமைச்சர்கள் மட்டுமே அந்த இடத்தில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பரப்பப்பட்ட தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்த அவர், ஜான் ஆரோக்கியசாமியோ அல்லது விஷ்ணு ரெட்டியோ அந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதை உறுதியாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in