LATEST NEWS
“நின்றால் கைது… நடந்தால் கைது… இதற்கெல்லாம் நாங்க பயப்பட மாட்டோம்…! தவெகவின் போக்கை சர்க்கஸ் கும்பல் என விமர்சித்த உதயநிதி..!!
நாம் ஆட்சிக்கு வருவோம் என்று இந்த சர்க்கஸ் கும்பலே நினைத்திருக்காது என தவெகவை உதயநிதி கடுமையாக விமர்சித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் பேசிய அவர், நின்றால் கைது, நடந்தால் கைது என தற்போதைய அரசு மோசமான பாசிச அரசாகச் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், இந்த அரசு தன்னையும் கைது செய்ததாகவும், ஆனால் அது தனக்கு சுற்றுலா சென்று வந்தது போலத் தான் இருந்தது என்றும் கூறினார். அத்துடன், கடுமையான மிசா சட்டத்தையே எதிர்கொண்ட திமுகவினர் இதுபோன்ற நடவடிக்கைகளைப் பார்த்து ஒருபோதும் பயப்பட மாட்டார்கள் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
