LATEST NEWS
“தவெகவில் வெடிக்கும் பதவிப் போர்..!” பொதுச்செயலாளரிடம் பலமுறை கேட்டும் பலனில்லை.. நேரடியாக களத்தில் இறங்கும் எக்ஸ் அமைச்சர்கள்.. கசிந்த பரபரப்புத் தகவல்கள்..!!
பிற கட்சிகளில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்களுக்கு இதுவரை உரிய கட்சிப் பதவிகள் வழங்கப்படாதது அதிருப்தி குரலாக எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. தவெகவில் இணைந்து நீண்ட நாட்களாகியும் பொறுப்புகள் கிடைக்காததால் அதிருப்தியில் இருப்பவர்கள் விரைவில் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து முறையிடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுதொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்திடம் பலமுறை வலியிறுத்தியும் உரிய பலன் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிற. இதன் காரணமாகவே இடைப்பட்ட நிர்வாகிகளை நாடுவதை தவிர்த்துவிட்டு, நேரடியாகத் தலைவர் விஜய்யை சந்தித்து தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம் என்று சம்பந்தப்பட்ட நபர்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
