LATEST NEWS
அடக்கடவுளே..! ஆர்டிஓ சோதனைக்குப் பயந்து பறந்த பைக் ஓட்டுநர்.. அடுத்து நடந்த கூத்தே பாருங்க.. இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
பெங்களூரு நகரில் அனுமதியின்றி இயக்கப்படும் பைக் டாக்ஸிகளுக்கு எதிரான வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகளின் திடீர் சோதனையின் போது, எதிர்பாராத விதமாகப் பரபரப்பான ஒரு விபத்து அரங்கேறியது. ஒடிசா மாநிலப் பதிவு எண் கொண்ட இருசக்கர வாகனத்தில் பைக் டாக்ஸி ஓட்டிவந்த நபர், அதிகாரிகளின் வாகன சோதனையைக் கண்டதும் பீதியடைந்துள்ளார். தன்னிடம் உரிய ஆவணங்கள் மற்றும் முறையான அனுமதி இல்லை என்பதை உணர்ந்த அவர், அதிகாரிகளிடம் சிக்காமல் தப்பிக்க முயன்றார். இதனால் பதற்றத்துடன் தனது வாகனத்தை அதிவேகமாக இயக்கத் தொடங்கிய அவர், போக்குவரத்து விதிமுறைகளை மீறி தப்பியோட முற்பட்டார்.
பெங்களூரில் #RTO அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையின் (#RTORaid) போது, ஒடிசா மாநிலப் பதிவெண் கொண்ட ஒரு பைக் டாக்ஸி ஓட்டுநர் அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க முயன்றபோது நிகழ்ந்த விபத்தின் காட்சி.. #Bengaluru pic.twitter.com/6dvdCIk1cV— M.M.NEWS உடனடி செய்திகள் (@rajtweets10) August 18, 2026
இந்த அவசரமான தப்பியோடும் முயற்சியின் போது பைக்கை தூக்கி ஒட்டியுள்ளார். இந்த விபத்தில் பின்னல் இருந்தவர் நிலைதடுமாறி சாலையில் தூக்கி வீசப்பட்டு லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினாலும், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசலும் பரபரப்பும் ஏற்பட்டது. அனுமதியற்ற பைக் டாக்ஸிகளை ஒடுக்குவதற்காக மேற்கொள்ளப்படும் இதுபோன்ற திடீர் சோதனைகள் ஓட்டுநர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதோடு, சில நேரங்களில் இது போன்ற ஆபத்தான விபத்துகளுக்கும் வழிவகுக்கிறது என்பதை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
