LATEST NEWS
“இனியும் சுமக்க முடியாது” செந்தில் பாலாஜியை கழற்றிவிடும் அறிவாலயம்..? அதிமுகவுக்குள் இழுக்க ரகசிய ‘ரெட் கார்பெட்’ விரிக்கும் இபிஎஸ்..!!
திமுகவில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அதிமுகவிற்குள் கொண்டு வருவதற்கான ரகசிய முயற்சிகளில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில காலமாக வெவ்வேறு வழக்குகளில் தவெக அரசு கொடுத்து வரும் தொடர் நெருக்குதல்கள் காரணமாக, செந்தில் பாலாஜியை இனியும் கட்சியில் சுமக்க முடியாது என்ற முடிவுக்கு அறிவாலயம் வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் எடப்பாடி பழனிசாமி, செந்தில் பாலாஜியை மீண்டும் அதிமுகவிற்குள் இழுக்க சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பதாகப் பேச்சுக்கள் எழுந்துள்ளன.
செந்தில் பாலாஜியின் வருகை அதிமுகவிற்குள் ஒருபுறம் பலம் சேர்த்தாலும், கொங்கு மண்டலத்தின் மற்றொரு முக்கியத் தலைவரான எஸ்.பி. வேலுமணி இதனால் போர்க்கொடி தூக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. எனினும், செந்தில் பாலாஜி உள்ளே வந்தால் கொங்கு அரசியலில் தனக்குச் சவாலாக இருக்கும் எஸ்பி வேலுமணியை எளிதாக ஓரங்கட்டிவிடலாம் என இபிஎஸ் திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த அதிரடி அரசியல் நகர்வு ஒட்டுமொத்த கொங்கு மண்டல அரசியலிலும், அதிமுக உள்கட்சியிலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
