“பிரியாணி அண்டாவில் மனித கறி..!” 300 சிசிடிவி கேமராக்கள் காட்டிய இளம் ஜோடி.. சிவப்பு நிற சூட்கேஸ் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்.. சென்னையில் வெளிவந்த சைக்கோ கொலை பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“பிரியாணி அண்டாவில் மனித கறி..!” 300 சிசிடிவி கேமராக்கள் காட்டிய இளம் ஜோடி.. சிவப்பு நிற சூட்கேஸ் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்.. சென்னையில் வெளிவந்த சைக்கோ கொலை பின்னணி..!!

Published

on

சென்னையில் இருந்து ஆந்திரா சென்ற ரயிலில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ரத்தக்கரையுடன் கண்டெடுக்கப்பட்ட சிவப்பு நிற சூட்கேசிற்குள், ஒரு பெண்ணின் தலை நீங்கலான உடல் பாகங்கள் மற்றும் கை கால்கள் இருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கண்ணாடி அணிந்த இளம் பெண் பகவதி பாஜி மற்றும் குறுந்தாடி வைத்திருந்த மாணிக் லஸ்கர் ஆகிய இருவரும் அந்த சூட்கேஸை ரயிலில் வைத்துவிட்டு இறங்கியது தெரியவந்தது. மேலும், அவர்கள் கூடுவாஞ்சேரி பகுதிக்குச் சென்றதை 300-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீசார் உறுதி செய்தனர்.

அவர்களின் வீட்டைப் பூட்டியிருந்த நிலையில், உள்ளே சென்று பார்த்த காவல்துறையினருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு, தடங்களை மறைப்பதற்காகப் பிரியாணி செய்யும் பெரிய பாத்திரத்தில் மைதா மாவு மற்றும் காய்கறிகளுடன் சேர்த்துச் சமைக்க முயன்ற கோரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. கொலை செய்யப்பட்டவர் கடந்த 10 நாட்களாக அவர்களுடன் தங்கியிருந்த ஹைதுல் நிஷா என்பதும், அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறே இந்த வெறிச்செயற்குக் காரணம் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

ஹைதுல் நிஷாவின் மகன் தாம்பரத்தில் பணிபுரிந்து வந்தாலும், தாயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பெருங்களத்தூரில் தனியாக வசித்து வருவதாகத் தெரிவித்தார். இதற்கிடையே, கொடூரமான முறையில் கொலை செய்துவிட்டுத் தலைமறைவான பகவதி பாஜி மற்றும் மாணிக் லஸ்கர் இருவரும் ஒடிசாவில் பதுங்கியிருப்பதை அறிந்த தனிப்படை போலீசார், அவர்களைக் கைது செய்வதற்காகத் தீவிரமாக ஒடிசா விரைந்துள்ளனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in