“காங்கிரஸ் எப்பவுமே கூஜா தூக்கித்தான்” நீங்க ஓட்டுப் போட்டு நான் ஜெயிக்கல.. காங்கிரஸ் கவுன்சிலருடன் திமுக கவுன்சிலர்கள் மோதல்.. திருவொற்றியூரில் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“காங்கிரஸ் எப்பவுமே கூஜா தூக்கித்தான்” நீங்க ஓட்டுப் போட்டு நான் ஜெயிக்கல.. காங்கிரஸ் கவுன்சிலருடன் திமுக கவுன்சிலர்கள் மோதல்.. திருவொற்றியூரில் பரபரப்பு..!!

Published

on

சென்னை திருவொற்றியூர் மண்டல மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக கவுன்சிலர்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . மண்டலக் கூட்டத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்ட போது, இரு தரப்பினருக்கும் இடையே திடீரென மோதல் போக்கு உருவானது.

இந்தக் கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகச் சூழ்ந்து கொண்டு காங்கிரஸ் கவுன்சிலருடன் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . அப்போது திமுக கவுன்சிலர்கள், “காங்கிரஸ் எப்பவுமே கூஜா தூக்கித்தான்… அரசாங்கத்தைப் பற்றித் தப்பாகப் பேசினால் நான் கேள்வி கேட்பேன்; நீங்க ஓட்டுப் போட்டு நான் ஜெயிக்கல” என்று மிகக் காட்டமான வார்த்தைகளை முன்வைத்துப் பேசினர் .

Advertisement

அரங்கமே அதிரும் வகையில் ஒட்டுமொத்த திமுக கவுன்சிலர்களும் தனக்கு எதிராகத் திரண்ட போதிலும், அந்தக் காங்கிரஸ் கவுன்சிலர் பயப்படாமல் தனியாளாக நின்று அவர்களைத் தைரியமாகச் சமாளித்தார் . இந்த மோதல் சம்பவத்தால் திருவொற்றியூர் மண்டலக் கூட்டத்தில் நீண்ட நேரம் பெரும் சலசலப்பும் பதற்றமான சூழலும் நிலவியது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in