ஜஸ்ட் மிஸ்..! ஓடிக்கொண்டிருந்தபோதே பயங்கர சத்தத்துடன் வெடித்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்..! நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்… பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஜஸ்ட் மிஸ்..! ஓடிக்கொண்டிருந்தபோதே பயங்கர சத்தத்துடன் வெடித்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்..! நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்… பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!

Published

on

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று திடீரென வெடித்துச் சிதறி தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூரத்கர் பகுதியில் உள்ள பாபா ராம்தேவ் கோவில் அருகே உள்ள ஒரு குறுகிய குடியிருப்புப் பாதையில் திங்கட்கிழமை மாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

ஸ்கூட்டரிலிருந்து திடீரென புகை வந்ததைத் தொடர்ந்து, அது பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பிழம்பாக மாறியுள்ளது.இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த வீடியோவில், ஸ்கூட்டர் திடீரென வெடித்துத் தீப்பிடித்தவுடன், அதன் மேல் இருந்த சிறுவன் உடனடியாகக் கீழே குதித்து உயிர் தப்பியுள்ளார். அதேபோல் அருகில் நின்று கொண்டிருந்த மற்றொரு சிறுவனும் சுதாரித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி தப்பியதால், இரு சிறுவர்களும் நல்வாய்ப்பாக எந்தவித காயமுமின்றி உயிர் பிழைத்தனர்.

Advertisement

பயங்கரமாகப் பற்றிய எரிந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சுமார் 20 நிமிடங்கள் வரை நடுரோட்டிலேயே தொடர்ந்து எரிந்து சாம்பலாகியுள்ளது. பேட்டரி குறைபாடுகள், வெப்பமடைதல் அல்லது சார்ஜிங் பிரச்சனைகள் காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து இன்னும் முறையான விசாரணை அறிக்கை வெளியாகவில்லை.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in