LATEST NEWS
“அடிச்ச கை சும்மா இருக்காது..!” டெலிவரி பாயை தாக்கிய பெண் கஸ்டமர்.. அடுத்த நொடியே கீழே தள்ளி வாலிபர் செய்த காரியத்தை பாருங்க.. இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
ஆன்லைன் டெலிவரி பாய் ஒருவர் வாடிக்கையாளரின் வீட்டிற்குப் பார்சலை விநியோகம் செய்யச் சென்ற போது, அதனை வாங்க வந்த பெண் வாடிக்கையாளரின் கைகளில் இருந்து பார்சல் தவறி கீழே விழுந்ததால், ஆத்திரமடைந்த அந்தப் பெண் டெலிவரி பாயை சரமாரியாகத் தாக்கத் தொடங்கியுள்ளார். இதனால் கடும் கோபமடைந்த டெலிவரி பாயும் கட்டுப்பாட்டை இழந்து, அந்தப் பெண்ணை பதிலுக்குத் திருப்பித் தாக்கத் தொடங்கியதோடு, அவளைக் கீழே தள்ளி கால்களாலும் கைகளாலும் மிகக் கொடூரமாக உதைத்து அடித்த விபரீதச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
एक डिलीवरी बॉय पार्सल लाता है, कस्टमर पार्सल लेने बाहर आती है, जैसे ही डिलीवरी बॉय पार्सल महिला को देता है तो वो उसके हाथ से गिर जाता है, जिससे महिला कस्टमर डिलीवरी बॉय के साथ मारपीट शुरू कर देती है, गुस्से में डिलीवरी बॉय भी महिला को मारना शुरू करता है और गिरा कर लात थप्पड़ का… pic.twitter.com/wqlL03qIlI— Ruksar_X (@Ruksar_X) August 26, 2026
இந்த மோதலில் பார்சல் கீழே விழுந்ததற்குக் காரணியாக இருந்த பெண் வாடிக்கையாளர் பக்கமே தவறு இருந்தாலும், ஒரு பெண்ணைக் கீழே தள்ளி அந்த டெலிவரி ஊழியர் இந்த அளவிற்கு மிருகத்தனமாகத் தாக்கியிருக்கக் கூடாது என்று பொதுவெளியில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. டெலிவரி பாயின் இந்த ஆக்ரோஷமான தாக்குதலால் படுகாயமடைந்த அந்தப் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொழில்முறை ஒழுக்கத்தை மீறி வாடிக்கையாளரைத் தாக்கிய டெலிவரி பாயின் இந்த பதைபதைக்க வைக்கும் மோதல் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி நெட்டிசன்கள் மத்தியில் கடுமையான விவாதங்களையும் கண்டனங்களையும் உருவாக்கியுள்ளது.
