“அழுகை சீன் எல்லாம் கிடையாது பாஸ்..!” காதலனை மெட்ரோ ஸ்டேஷனுக்கு வரவழைத்த காதலி… கடைசியில் நடந்த நெகிழ்ச்சியான ட்விஸ்ட்.. நெட்டிசன்களை வியக்கவைத்த சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அழுகை சீன் எல்லாம் கிடையாது பாஸ்..!” காதலனை மெட்ரோ ஸ்டேஷனுக்கு வரவழைத்த காதலி… கடைசியில் நடந்த நெகிழ்ச்சியான ட்விஸ்ட்.. நெட்டிசன்களை வியக்கவைத்த சம்பவம்..!!

Published

on

தனது காதலனுடனான உறவை முறித்துக் கொள்ள முடிவெடுத்த இளம் பெண் ஒருவர், அதற்காகத் தனது காதலனை மெட்ரோ இரயில் நிலையத்திற்கு அழைத்துள்ளார். காதலியின் அழைப்பை ஏற்று அந்த இளைஞனும் அங்கு வந்து சேர்ந்துள்ளார். அப்போது அந்தப் பெண், தங்களது பிரேக்கப் மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்காகத் தான் கொண்டு வந்திருந்த கிட்-கேட் சாக்லேட்டை அவரிடம் நீட்டியுள்ளார். மேலும், “இன்றிலிருந்து நம் இருவரின் பாதைகளும் தனித்தனி” என்று கூறித் தனது பிரிவை வெளிப்படுத்தியுள்ளார்.

காதலியின் இந்தத் திடீர் முடிவைக் கேட்டு அந்த இளைஞன் சிறிது நேரம் யோசித்துள்ளார். பின்னர், எந்தவொரு சண்டை சச்சரவும் இன்றி, இருவரும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் கைகளைக் குலுக்கிக் கொண்டு (Shake hands) தங்களது காதலை சுமுகமாக முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர். பொதுவாக பிரேக்கப் என்றாலே அழுகையும் சண்டையும் இருக்கும் சூழ்நிலையில், எவ்வித கசப்பும் இல்லாமல் சாக்லேட் கொடுத்து மகிழ்ச்சியோடு தங்களது 3 வருடக் காதலுக்கு அவர்கள் சுபமாக ‘தி எண்ட்’கார்டு போட்டு பிரிந்த விநோதச் சம்பவம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in