LATEST NEWS
OMG…! 8 ஆண்களின் மொத்த எடை… நகர்த்தக்கூட முடியாத அரை டன் தங்கம்..! உலகையே மிரள வைத்த ஆஸ்திரேலியாவின் பிரம்மாண்ட கின்னஸ் சாதனை..! இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ..!!
ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட உலகின் மிகக் கனமான தங்கக் கட்டி, கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்துப் புதிய சரித்திரம் படைத்துள்ளது. 521.2 கிலோகிராம் எடைகொண்ட இந்த பிரம்மாண்டமான தங்கக் கட்டியை ஒருவர் மட்டுமல்ல, நான்கு பேர் சேர்ந்தாலும் நகர்த்துவது கடினம். ‘கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்’ தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதன் வீடியோவைப் பகிர்ந்ததைத் தொடர்ந்து, இணையத்தில் இந்தச் செய்தி மிகவும் வைரலாகி வருகிறது.
நாணயங்கள் மற்றும் தங்கக் கட்டிகள் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற ஆஸ்திரேலியாவின் ‘தி பெர்த் மின்ட்’ நிறுவனம் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. 521.2 கிலோ எடை என்பது சராசரியாக 8 ஆண்களின் எடைக்குச் சமமானதாகும். இவ்வளவு பெரிய தங்கக் கட்டியைத் தயாரிப்பதற்காக ஆஸ்திரேலியாவின் 9 முக்கிய தங்கச் சுரங்க நிறுவனங்கள் ஒன்றிணைந்து தங்கத்தை அளித்துள்ளன. 500 கிலோவிற்கும் அதிகமான தங்கத்தை ஒரே நேரத்தில் உருக்கி, சரியான வெப்பநிலையைக் கட்டுப்படுத்தி ஒற்றைக் கட்டியாக வார்ப்பது மிகவும் கடினமான தொழில்நுட்ப சவாலாக இருந்தது.
https://www.instagram.com/reel/DcTE056iiW_/?utm_source=ig_web_button_share_sheet
பொதுவாக இவ்வளவு மதிப்புமிக்க பொருட்களைப் பாதுகாப்பாகப் பூட்டி வைப்பார்கள். ஆனால் ‘தி பெர்த் மின்ட்’ நிறுவனம் இதனைப் பொதுமக்களின் பார்வைக்காக வைத்துள்ளது. அங்கு வரும் பார்வையாளர்கள் அரை டன்னுக்கும் அதிகமான எடையுள்ள இந்த பிரம்மாண்டமான தூய தங்கக் கட்டியைத் தங்கள் கண்களால் நேரடியாகக் கண்டு ரசிக்கலாம்.
