LATEST NEWS
“அட என்னப்பா சொல்லுறீங்க..! வெள்ளத்துல மிதந்து வந்த லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகள்..!” அள்ளிச் சுத்தம் செய்த மக்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!
நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட கொடூரமான காட்டாற்று வெள்ளப் பேரழிவைத் தொடர்ந்து, அங்கிருந்து இதயத்தை உலுக்கும் மற்றும் அதிரவைக்கும் பல வகையான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, இன்று நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை வங்கிக்கு வெளியே, பெருவெள்ளத்தில் அடித்து வரப்பட்ட நேபாள ரூபாய் நோட்டுகள் நிரம்பிய பெட்டி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பெட்டியில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகள் அனைத்தும் சேறும் சகதியுமாக இருந்ததால், அங்கு கூடியிருந்த பொதுமக்கள் அந்த ரூபாய் நோட்டுகளை எடுத்து, அங்கிருந்த வெள்ள நீரிலேயே ஒவ்வொன்றாகக் கழுவிச் சுத்தம் செய்யும் விசித்திரமான காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.
https://twitter.com/ratanac81230688/status/2093996213356073012/video/1
இயற்கை சீற்றத்தின் இந்த இக்கட்டான இடிபாடுகளுக்கு நடுவே மனிதாபிமானமற்ற கொடூரச் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்த ரூபாய் நோட்டுப் பெட்டி கிடைப்பதற்கு முன்பாக வெளியான மற்றொரு அதிர்ச்சியூட்டும் வீடியோவில், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த ஒரு பெண்ணின் சடலத்திலிருந்து அங்கிருந்த சிலர் நகைகளையும், தங்க ஆபரணங்களையும் இரக்கமில்லாமல் திருடி எடுக்கும் மிரள வைக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன. ஒருபுறம் பிழைப்பதற்காகப் பணத்தைச் சுத்தம் செய்யும் அவலமும், மறுபுறம் பிணத்திடம் திருடும் கொடூரமும் என நேபாளப் பேரழிவின் பல்வேறு கோர முகங்களை வெளிப்படுத்தும் இந்த வீடியோக்கள் தற்பொழுது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
