LATEST NEWS
“இனி என்னிடம் எதுவும் இல்லை” இனி போதும்பா… ஒட்டுமொத்த ரசிகர்களையும் அழவைத்த மெஸ்ஸியின் உருக்கமான அறிவிப்பு..!
சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினா நாட்டின் புகழ்பெற்ற நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 21 ஆண்டுகால தனது நீண்ட கால சர்வதேச விளையாட்டுப் பயணத்திற்கு உணர்வுப்பூர்வமான கடிதம் மூலம் அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். “என்னிடமிருந்த அனைத்தையும் நான் கொடுத்துவிட்டேன்; இனி கொடுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை” என்று மெஸ்ஸி உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
திறமையான பல இளம் வீரர்கள் உருவாகி வருவதாகவும், அவர்களுக்கான வாய்ப்புகள் கிடைத்து அவர்களும் வளர வேண்டும் என்பதற்காகவே தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் மெஸ்ஸி தெளிவுபடுத்தியுள்ளார். இந்த முடிவு தனக்கு மிகுந்த வேதனையைத் தந்தாலும், சர்வதேச அணியில் இருந்து விலகுவதற்கு இதுவே சரியான தருணம் என்றும் அவர் தனது பதிவில் பகிர்ந்துள்ளார்.
