LATEST NEWS
திமுக ஆட்சியில் டாஸ்மாக் ஊழலா.? முடிஞ்சா நிரூபிச்சி காட்டுங்க.. அமைச்சர் ஆதவ்விற்கு சவால் விட்ட செந்தில் பாலாஜி..!!
திமுக ஆட்சிக்காலத்தில் டாஸ்மாக்கில் ஊழல் நடந்ததாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியதற்கு, “முடிந்தால் அதை நிரூபித்துக் காட்டுங்கள்” என திமுகவின் வி.செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் காரசாரமாகச் சவால் விடுத்துள்ளார். திமுகவின் கொள்கையே பூரண மதுவிலக்கு என்பதால் தான் கடைகள் படிப்படியாக மூடப்பட்டு வருவதாகவும், ஆனால் திட்டமிட்டு ஊழல் நடந்தது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்க சிலர் முயல்வதாகவும் அவர் அவையில் சாடினார்.
மேலும், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை அளிக்கும் போது, கடந்த காலத்தில் அரசு போட்டது அனைத்தும் தவறான மற்றும் ஜோடிக்கப்பட்ட வழக்குகள் என்பது மக்களுக்குத் தெளிவாகப் புரியும் என்றும் செந்தில் பாலாஜி அழுத்தமாகக் குறிப்பிட்டார். டாஸ்மாக் விவகாரம் தொடர்பாகச் சட்டப்பேரவையில் இன்று நடந்த இந்த விவாதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
