“காரணத்தைச் சொன்னால் தான் அனுமதி..!” முதல்வர் விஜய்யின் தனிச்செயலாளர் ஜெகதீஷின் அதிரடி கெடுபிடி.. தவெக அமைச்சர்கள் கடும் கலக்கம்.. கோட்டை வட்டாரத்தில் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“காரணத்தைச் சொன்னால் தான் அனுமதி..!” முதல்வர் விஜய்யின் தனிச்செயலாளர் ஜெகதீஷின் அதிரடி கெடுபிடி.. தவெக அமைச்சர்கள் கடும் கலக்கம்.. கோட்டை வட்டாரத்தில் பரபரப்பு..!!

Published

on

திரைத்துறைக் காலம் தொட்டே நடிகர் விஜய்யின் நீண்டகால மேலாளராகவும், தற்பொழுது தவெக அரசின் முதல்வர் விஜய்யின் தனிச்செயலாளராகவும் இருக்கும் ஜெகதீஷ் பழனிசாமியின் அதிரடி நிர்வாகக் கட்டுப்பாடுகளால் தவெக அமைச்சர்கள் கடும் கலக்கமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுவாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்படும் முதல்வர் தனிச்செயலாளர் பதவியில், மரபுகளை மீறிச் சினிமா மற்றும் கட்சியைச் சேர்ந்த ஜெகதீஷ் நியமிக்கப்பட்டது எதிர்க்கட்சிகளிடையே விவாதத்தைக் கிளப்பியது. தற்பொழுது முதல்வர் விஜய்யைச் சந்திக்க விரும்பும் அமைச்சர்கள் அனைவரும் தனிச்செயலாளர் ஜெகதீஷை அணுகி, சந்திப்புக்கான காரணத்தை விரிவாகக் கூறினால் மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாகவும், இல்லையெனில் மனுக்கள் காத்திருப்புப் பட்டியலுக்குச் சென்றுவிடுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஜூனியர் அமைச்சர்கள் பலரால் தங்களுக்குத் தேவையான நேரத்தில் முதல்வரைச் சந்திக்க முடியாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்த அதிருப்திக்குத் தீர்வு காண வேண்டி, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தைச் சில அமைச்சர்கள் அணுகியுள்ளனர். அதற்குப் புஸ்ஸி ஆனந்தோ, தானும் அதே போன்றதொரு இக்கட்டான நிலையில் தான் இருப்பதாகக் கூறி, “தலைவர் தளபதியிடம் தகவலைச் சொல்லிவிட்டுத் தெரிவிக்கிறேன், அவர் நினைத்தால் உங்களுக்கு அழைப்பு வரும்” எனக் கைவிரித்துவிட்டதாகத் தெரிகிறது. தவெக அரசுக்குள் திரைக்குப் பின்னால் நடக்கும் இந்த அதிரடி பவர் பாலிடிக்ஸ் (Power Politics) அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in