“சொல்றதை கேக்கலான பேஸ்புக்ல போட்டுடுவோம்..” காட்டுப்பகுதிக்கு பெண்ணை கடத்தி உடுத்திய ஆடை இல்லாமல்… நெஞ்சை பதறவைக்கும் நெல்லை சம்பவம்…!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“சொல்றதை கேக்கலான பேஸ்புக்ல போட்டுடுவோம்..” காட்டுப்பகுதிக்கு பெண்ணை கடத்தி உடுத்திய ஆடை இல்லாமல்… நெஞ்சை பதறவைக்கும் நெல்லை சம்பவம்…!!

Published

on

நெல்லை மாவட்டம் தாழையூத்து பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை ஒரு கும்பல் காட்டுப்பகுதிக்கு கடத்திச் சென்று, கொடூரமான முறையில் மிரட்டி ஆபாசமாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த செயலில் ஈடுபட்ட மணிகண்டன், சிவா மற்றும் அவர்களது நண்பர்கள், தாங்கள் சொன்னபடி கேட்காவிட்டால் அந்த வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவோம் என அந்தப் பெண்ணை மிரட்டியுள்ளனர். மேலும், அவரிடமிருந்த தங்க நகைகள் மற்றும் செல்போனையும் அந்த கும்பல் பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளது.

இந்த கொடூர சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் நெல்லை மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

Advertisement

போலீசாரின் அதிரடி விசாரணையில், பெண்ணை மிரட்டி ஆபாச படம் எடுத்து நகை பறிப்பில் ஈடுபட்ட மணிகண்டன், சிவா உட்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மற்றும் குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in