24 வருஷ காத்திருப்பு.. IVF முறையில் பிறந்த இரட்டை குழந்தைகள் துடிக்க துடிக்க கொலை… பிரசவத்திற்கு பின் மாறிய குணம்.. தாயை கொலையாளியாக மாற்றிய கொடூர நோய்.!! – cinefeeds
Connect with us

CRIME

24 வருஷ காத்திருப்பு.. IVF முறையில் பிறந்த இரட்டை குழந்தைகள் துடிக்க துடிக்க கொலை… பிரசவத்திற்கு பின் மாறிய குணம்.. தாயை கொலையாளியாக மாற்றிய கொடூர நோய்.!!

Published

on

பெங்களூரு நகரின் வசரஹள்ளி பகுதியில் 24 ஆண்டுகள் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ஐ.வி.எஃப் சிகிச்சை மூலம் பிறந்த 4 மாத இரட்டைக் குழந்தைகளை, பிரசவத்திற்குப் பிந்தைய மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட தாய் நீரில் மூழ்கடித்துக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராமலிங்கப்பா – உமா தேவி தம்பதியினருக்குத் திருமணம் ஆகி நீண்ட நாட்களாகக் குழந்தை இல்லாத நிலையில், கடந்த மே மாதம் இந்த இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால், குழந்தைகள் பிறந்த ஒன்றரை மாதங்களிலேயே உமா தேவியின் நடத்தையில் மாற்றங்கள் ஏற்பட்டு, குழந்தைகளைக் காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறி வந்துள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது, அவருக்குப் பிரசவத்திற்குப் பிந்தைய மன அழுத்தம் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் இருப்பது தெரியவந்தது. இதற்காக அவருக்குச் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், செப்டம்பர் 1-ம் தேதி மதியம் கணவர் ராமலிங்கப்பா வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது, ஒரு அறை உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்றபோது, உமா தேவி துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றதைக் கண்டு அவரை மீட்டுள்ளார்.

Advertisement

ஆனால், அதே அறையில் இருந்த நான்கு மாத பச்சிளம் இரட்டைக் குழந்தைகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தனர். குழந்தைகளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர்கள் நீரில் மூழ்கடிக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மனைவியே குழந்தைகளைக் கொன்றுவிட்டுத் தற்கொலைக்கு முயன்றதாகக் கணவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in