LATEST NEWS
ஜனநாயகம் செத்துப்போச்சு.. “கெட் அவுட்” என திமுக MLA-க்களை பார்த்து கோபத்தில் கத்திய சபாநாயகர்… பேரவையில் வரலாறு காணாத பரபரப்பு..!!
தமிழக சட்டப்பேரவையில் சர்க்காரியா கமிஷன் மற்றும் மிசா குறித்து தவெக முதலமைச்சர் விஜய் பேசிய பேச்சுகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்க முடியாது எனச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திமுக உறுப்பினர்கள், சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு “செத்துப்போச்சு செத்துப்போச்சு ஜனநாயகம் செத்துப்போச்சு” என்று முழக்கமிட்டு அவையை முடக்க முயன்றனர். அப்போது பேசிய சபாநாயகர், திமுகவினர் அவையை முடக்குவதற்கான பயிற்சியை மட்டுமே எடுத்துக்கொண்டு சபைக்கு வந்துள்ளதாகக் காரசாரமாகக் குற்றம்சாட்டினார்.
திமுக உறுப்பினர்களின் இந்தத் தொடர் முழக்கங்களாலும் அராஜகப் போக்கினாலும் அவையில் கடும் கூச்சல் குழப்பம் நிலவியது. ஒருகட்டத்தில் பொறுமையிழந்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், தங்களைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக உறுப்பினர்களைப் பார்த்து “கெட் அவுட்” என்று ஆவேசமாகக் கத்தி அவையை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார். சபாநாயகரின் இந்த அதிரடி உத்தரவால் சட்டப்பேரவை வரலாறே காணாத வகையில் பெரும் போர்க்களமாக மாறியுள்ளது.
