“உள்ளூரில் அடித்தால் மாட்டிப்போம்…” வெளியூரில் ‘ஐடி ஊழியர்கள்’ என ஹைடெக் வேஷம்…! 9 மாவட்டங்களை அலறவிட்டு, காதல் மனைவிக்கு ரூ.10 லட்சத்தில் சொகுசு கார் வாங்கித்தந்த ‘கில்லாடி’… கடைசியில் காட்பாடி போலீஸ் வைத்த செக்..!! – cinefeeds
Connect with us

CRIME

“உள்ளூரில் அடித்தால் மாட்டிப்போம்…” வெளியூரில் ‘ஐடி ஊழியர்கள்’ என ஹைடெக் வேஷம்…! 9 மாவட்டங்களை அலறவிட்டு, காதல் மனைவிக்கு ரூ.10 லட்சத்தில் சொகுசு கார் வாங்கித்தந்த ‘கில்லாடி’… கடைசியில் காட்பாடி போலீஸ் வைத்த செக்..!!

Published

on

வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஓய்வுபெற்ற ஆசிரியை வீட்டில் 36 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தில், சரித்திரப் பதிவேடு குற்றவாளி தனது மனைவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். காட்பாடி கிறிஸ்டியன் பேட்டையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை மரியா மற்றும் அவரது கணவர் ரவிக்குமார் ஆகியோர் பூட்டிவிட்டுச் சென்ற வீட்டின் பூட்டை உடைத்து 36 சவரன் நகைகள் திருடப்பட்ட நிலையில், இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, காட்பாடி டெல் மலைப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த ஒரு சொகுசு காரைக் கைப்பற்றி, அதில் இருந்த தம்பதியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், காரில் இருந்தவர்கள் விருதுநகரைச் சேர்ந்த முத்துவேல் கார்த்திக் மற்றும் அவரது மனைவி பிரபாவதி என்பது தெரியவந்தது. முத்துவேல் கார்த்திக் மீது விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, தேனி போன்ற பல்வேறு மாவட்டங்களில் 9-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. உள்ளூரில் திருடினால் எளிதில் சிக்கிவிடுவோம் என்பதால், வெளியூர்களுக்குச் சென்று தங்களை ‘ஐடி நிறுவன ஊழியர்கள்’ என பொய் கூறி வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, அப்பகுதியில் உள்ள வீடுகளை நோட்டமிட்டு இவர்கள் கொள்ளையடித்து வந்தது அம்பலமானது.

Advertisement

கொள்ளையடித்த நகைகளை அரக்கோணம் மற்றும் திருத்தணி பகுதிகளில் அடகு வைத்தும், விற்றும் பணமாக்கிய இவர்கள், அந்தப் பணத்தில் காதல் மனைவி பிரபாவதிக்கு புதிய நகைகளை வாங்கியதோடு, ரூ.10 லட்சம் மதிப்பில் ஆடம்பர காரையும் வாங்கி உலா வந்துள்ளனர். தீவிர விசாரணைக்கு பின் இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 26 சவரன் தங்க நகைகளை மீட்டு இருவரையும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மீதமுள்ள நகைகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in