திடுக்கிடும் சம்பவம்… வங்கி ஊழியர்கள் கண்ணில் மிளகாய்த்தூளை வீசி 4 லட்சம் கொள்ளை… ஆனா அடுத்த 30 நிமிஷத்துல போலீஸ் வச்ச செக்மேட்..!! – cinefeeds
Connect with us

CRIME

திடுக்கிடும் சம்பவம்… வங்கி ஊழியர்கள் கண்ணில் மிளகாய்த்தூளை வீசி 4 லட்சம் கொள்ளை… ஆனா அடுத்த 30 நிமிஷத்துல போலீஸ் வச்ச செக்மேட்..!!

Published

on

மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில், வியாழக்கிழமை மாலை சுமார் 6:00 மணியளவில் வழக்கமான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அப்போது வாடிக்கையாளர் போல் உள்ளே நுழைந்த நபர் ஒருவர், பணக் கவுண்டரை நோக்கிச் சென்று யாரும் எதிர்பாராத நேரத்தில் ஊழியர்களின் முகத்திலும் கண்களிலும் சிவப்பு மிளகாய்த் தூளை வீசினார். இதனால் பார்வையை இழந்து ஊழியர்கள் தத்தளித்த நிலையில், அந்த நபர் கவுண்டரில் இருந்த 4 லட்சம் ரூபாய் பணத்தைப் பறித்துக்கொண்டு தப்பி ஓடினார்.

வங்கியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில், சிவப்பு குர்தா மற்றும் கருப்பு பைஜாமா அணிந்து முகத்தை முழுவதுமாக மூடியிருந்த அந்த நபர், ஊழியர்கள் மீது மிளகாய்த்தூளை வீசுவதும், தற்காப்புக்காக ஓடிய ஊழியர்களைத் துரத்துவதும் பதிவாகியிருந்தது. சம்பவம் நடந்த உடனேயே, ஆபத்தைப் பொருட்படுத்தாமல் சில ஊழியர்களும் பாதுகாப்பு ஊழியரும் அவரைத் துரத்த முயன்றனர். ஆனால், அப்பகுதியின் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அவர் தப்பிச் சென்றார்.

Advertisement

வங்கி அதிகாரிகள் உடனடியாகக் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் வங்கியின் உள்ளேயும் வெளியேயும் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். குற்றவாளியின் உருவம் மற்றும் அவர் தப்பிய திசையைக் கண்டறிந்த போலீசார், அப்பகுதியில் உடனடியாகச் சோதனைச் சாவடிகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதன் பலனாக, சம்பவம் நடந்த 30 நிமிடங்களுக்குள் குற்றவாளியைக் கைது செய்து, திருடப்பட்ட 4 லட்சம் ரூபாய் பணத்தையும் முழுமையாக மீட்டனர். தற்போது அவரிடம் மேலதிக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in