நாளை திருமணம்… இன்று மணமகன் கண் முன்னே துடிதுடித்து பலியான மணமகள்.. ஒரே நொடியில் சுக்குநூறாக கல்யாண கனவு… மதுரையில் உலுக்கிய சோகச் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நாளை திருமணம்… இன்று மணமகன் கண் முன்னே துடிதுடித்து பலியான மணமகள்.. ஒரே நொடியில் சுக்குநூறாக கல்யாண கனவு… மதுரையில் உலுக்கிய சோகச் சம்பவம்..!!

Published

on

மதுரை வாடிப்பட்டி அருகே, நாளை திருமணம் நடைபெறவிருந்த நிலையில் கார் மோதி மணப்பெண் மரியா வெல்சியா (26) மணமகனின் கண் முன்னேயே உயிரிழந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. செவிலியர் தேர்வு எழுதுவதற்காக மணப்பெண்ணை மணமகன் ஜெப பாஸ்டின் பைக்கில் அழைத்துச் சென்றபோது, எதிர்பாராதவிதமாக கார் ஒன்றின் டயர் வெடித்து பைக் மீது மோதியதில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த பயங்கர விபத்தில் சம்பவ இடத்திலேயே மணப்பெண் மரியா வெல்சியா பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் படுகாயமடைந்த மணமகன் ஜெப பாஸ்டின் உடனடியாக மீட்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திருமணம் நடக்கவிருந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்த இந்த மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in