CRIME
அடப்பாவி… பொண்டாட்டி நோய் வந்து செத்துட்டதா நாடகமாடிய கணவன்… போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டால் அம்பலமான திடுக்கிடும் உண்மை..!!
உத்தரப் பிரதேசத்தின் பரேலியில் உள்ள பரதாஸ்பூர் கிராமத்தைச் சேர்ந்த நீரஜ் என்பவருடன், பீகாரைச் சேர்ந்த மனோரமா என்பவருக்குச் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. மனோரமா நீண்ட நாட்களாகப் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறிய அவரது கணவர் நீரஜ், செவ்வாய்க்கிழமை மருந்து சாப்பிட்ட பிறகு மனோரமாவின் உடல்நிலை திடீரென மோசமடைந்து சிறிது நேரத்திலேயே உயிரிழந்துவிட்டதாகப் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், மனோரமாவின் மரணத்தில் சந்தேகம் எழுந்ததையடுத்து, கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புதன்கிழமை வெளிவந்த பிரேதப் பரிசோதனை அறிக்கையில், மனோரமா நோயினால் இறக்கவில்லை என்றும், அவர் கழுத்து நெரிக்கப்பட்டே கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் அதிர்ச்சித் தகவல் உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் நோயினால் இறந்தார் என்ற கணவர் நீரஜின் பொய் அம்பலமாகி, வழக்குக் கொலை வழக்காக மாறியுள்ளது. திருமணமான ஒரே ஆண்டில் இந்தச் சம்பவம் நடந்துள்ளதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது போலீசார் பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தடயங்களின் அடிப்படையில் கொலைக்கான காரணம் என்ன, இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்துச் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
