உங்க பண்ணையார் அரசியல் என்கிட்ட எடுபடாது… என்னை மதிச்சா நானும் மதிப்பேன்… முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு துரை வைகோ பதிலடி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

உங்க பண்ணையார் அரசியல் என்கிட்ட எடுபடாது… என்னை மதிச்சா நானும் மதிப்பேன்… முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு துரை வைகோ பதிலடி..!!

Published

on

முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ காரசாரமான கருத்துக்களை முன்வைத்துள்ளார். தன்னைச் சிறுமைப்படுத்துவதோ அல்லது பண்ணையார் அரசியல் செய்வதோ தன்னிடம் பலிக்காது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தன்னை மதித்துப் பேசுபவர்களைத் தானும் மதிப்பேன் என்றும், மாறாகப் பதிலுக்கு ஏதாவது செய்ய நினைத்தால், அதற்காகவே முழு நேரம் ஒதுக்கித் தானும் பதிலடி கொடுப்பேன் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

மிசா காலகட்டம் குறித்து கே.என்.நேரு பேசியதற்குப் பதிலளித்த துரை வைகோ, “மிசா காலத்தில் நான் பிறக்கவே இல்லை என்று நேரு தவறான கருத்தைக் கூறுகிறார்; அப்போது எனக்கு 3 வயது, நான் ப்ளே ஸ்கூல் சென்று கொண்டிருந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த எளிய வரலாறு கூட மூத்த அரசியல்வாதியான கே.என்.நேருவுக்குத் தெரியவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம், திமுக மற்றும் மதிமுக கூட்டணிக் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in