“காப்பாத்துங்க…” பெற்ற தாயே செய்த கொடூரம்.. ஏரியில் மிதந்த 6 வயது சிறுமி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்.. பரபரப்பு பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“காப்பாத்துங்க…” பெற்ற தாயே செய்த கொடூரம்.. ஏரியில் மிதந்த 6 வயது சிறுமி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்.. பரபரப்பு பின்னணி..!!

Published

on

ஹைதராபாத்தில் உள்ள உசேன் சாகர்ஏரியில், பெற்ற தாயே தனது 6 வயது மகளைத் தூக்கி வீசிய நெஞ்சைப் பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பழைய போயினபள்ளி ஹஸ்மத்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த ஷபானா என்ற பெண், வீடுகளில் வேலை செய்து தனது இரண்டு மகள்களை வளர்த்து வந்தார். இவரது இரண்டாவது மகளான 6 வயது ருக்ஸானாவிற்குத் தீவிர நுரையீரல் தொற்று பாதிப்பு இருந்தது. மகளின் மருத்துவச் செலவிற்குப் பணம் இல்லாததாலும், சிகிச்சைக்குப் போதிய வசதி இல்லாததாலும் மனமுடைந்த தாய் ஷபானா, பெற்ற மகள் என்றும் பாராமல் அவளை உசேன் சாகர் ஏரிக்குள் தூக்கி வீசி எறிந்துள்ளார்.

இந்தக் கொடூரமான காட்சியைக் கண்ட அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், சற்றும் யோசிக்காமல் உடனடியாக ஏரித் தண்ணீருக்குள் குதித்து அந்தச் சிறுமியைப் பத்திரமாக உயிருடன் மீட்டார். ஆட்டோ ஓட்டுநரின் இந்தத் துணிச்சலான மற்றும் சாதுரியமான செயலால், 6 வயது சிறுமி ருக்ஸானா நல்வாய்ப்பாகப் பெரும் உயிர்ச்சேதத்திலிருந்து தப்பினாள். தற்போது அந்தச் சிறுமி மேல் சிகிச்சைக்காகக் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறாள். வறுமையின் காரணமாகப் பெற்ற மகளையே தாய் ஏரியில் வீசிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in