என்னோட அப்பா இன்னைக்கு CM.. என்னோட அம்மாவுக்கு நன்றி…. ஜேசன் சஞ்சய் சொன்ன அந்த வார்த்தையால் அதிர்ந்த அரங்கம்..!! – cinefeeds
Connect with us

CINEMA

என்னோட அப்பா இன்னைக்கு CM.. என்னோட அம்மாவுக்கு நன்றி…. ஜேசன் சஞ்சய் சொன்ன அந்த வார்த்தையால் அதிர்ந்த அரங்கம்..!!

Published

on

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சரும் நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா‘ திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய ஜேசன் சஞ்சய், தனது முதல் பட வாய்ப்பை வழங்கிய படக்குழுவினர், தயாரிப்பு நிறுவனம் மற்றும் தனது குடும்பத்தினருக்கு மேடையில் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.

அப்போது தனது பெற்றோருக்கு நன்றி கூறிய அவர், “என்னோட அம்மாவுக்கு நன்றி.. என்னோட அப்பா இன்னைக்கு CM.. அவருக்கு நன்றி” எனக் குறிப்பிட்டார். தமிழக முதலமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் தனது தந்தை விஜய்யைக் குறிப்பிட்டு ஜேசன் சஞ்சய் மேடையில் பேசிய இந்த வார்த்தைகளைக் கேட்டதும், ஒட்டுமொத்த அரங்கமும் அதிரும் வகையில் அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் பயங்கரமாக ஆர்ப்பரித்துத் தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

Advertisement

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த சஞ்சய், “என் படத்தின் ரிலீஸைப் பார்க்க அப்பா ரொம்பவே ஆர்வமாக காத்திருக்கிறார். ஆனால், மக்கள் பணியில் அவருக்குப் பொறுப்புகள் அதிகம் என்பதால் படப் புரமோஷனுக்கு அவர் வர வேண்டிய அவசியமில்லை, வரவும் மாட்டார்” என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். தன் தந்தையின் அரசியல் நிழல் இல்லாமல், ஒரு இயக்குநராகத் தனி முத்திரை பதிக்கத் தயாராகி வரும் ஜேசன் சஞ்சய்யின் இந்த மாஸ் பேச்சும் விழாவின் வீடியோக்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in