“அச்சச்சோ.. 11 வயது சிறுமி கடத்தி 24 வயது வாலிபரின் வெறிச்செயல்..” துணிச்சலான தம்பதியால் நடந்த அதிசயம்.. நெஞ்சை பதறவைக்கும் கார் சேஷிங் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“அச்சச்சோ.. 11 வயது சிறுமி கடத்தி 24 வயது வாலிபரின் வெறிச்செயல்..” துணிச்சலான தம்பதியால் நடந்த அதிசயம்.. நெஞ்சை பதறவைக்கும் கார் சேஷிங் சம்பவம்..!!

Published

on

பள்ளியிலிருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த 11 வயது சிறுமி சார்லோட், மர்ம நபரால் கடத்தப்பட்டு நீல நிற ஹோண்டா காரின் பின் இருக்கையில் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சில மணி நேரங்களுக்குப் பிறகு, அமாண்டா டிஸ்லி மற்றும் பென்னி கொரியா தம்பதியினர் தங்களது ஐந்து குழந்தைகளுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, தங்களுக்குப் பக்கத்தில் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட அதே நீல நிற கார் நிற்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அமாண்டா அவசர சேவைகளைத் தொடர்புகொண்டு தகவல் கொடுக்க, பென்னி அந்த ஹோண்டா காரைத் தனது காரில் பின்தொடர ஆரம்பித்தார். போலீஸார் காரைச் சூழ முயன்றபோது, கடத்தல்காரன் சிக்னல்களை மதிக்காமல் கார் நெரிசல்களுக்கு இடையே அதிவேகமாகத் தப்பியோட முயன்றான். இருப்பினும், பென்னி விடாமல் துரத்த, அமாண்டா போலீஸாருக்குத் தங்களது இருப்பிடத்தை நொடிக்கு நொடி அப்டேட் செய்து கொண்டே இருந்தார்.

இறுதியாக, போலீஸ் அதிகாரிகள் அந்த ஹோண்டா காரை நாலாபுறமும் சூழ்ந்து மடக்கிப் பிடித்து, உள்ளே இருந்த சிறுமி சார்லோட்டை பத்திரமாக மீட்டனர். அமாண்டா மற்றும் பென்னி தம்பதியினர் அந்தச் சிறுமியைக் கண் இமைக்காமல் பின்தொடர்ந்ததால் மட்டுமே சார்லோட் இன்று உயிருடன் தனது குடும்பத்துடன் மீண்டும் இணைந்துள்ளார். 24 வயதான கடத்தல்காரன் மிகுவல் ரோட்ரிக்ஸ் என்பவனைக் கைது செய்த போலீஸார், அவன் மீது கடத்தல், பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் மற்றும் சாட்சிகளை மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தங்களுக்கு முன்பின் தெரியாத ஒரு சிறுமியின் உயிரைக் காப்பாற்ற, ஆபத்தான நிலையிலும் துணிச்சலாகச் செயல்பட்ட இந்தத் தம்பதியினரை உலகெங்கிலும் உள்ள நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in