அடச்சீ… வேலியே பயிரை மேய்ந்த கொடூரம்..! ஆன்மீக பயணம் என நம்பி ஏமாந்த 23 வயது பெண்… சீருடை அணிந்த 4 பேரால் நடந்த பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

அடச்சீ… வேலியே பயிரை மேய்ந்த கொடூரம்..! ஆன்மீக பயணம் என நம்பி ஏமாந்த 23 வயது பெண்… சீருடை அணிந்த 4 பேரால் நடந்த பகீர் சம்பவம்..!!

Published

on

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், ஆன்மீகச் சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி 23 வயது நிரம்பிய ஹரியானா மாநில பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட உ.பி காவல் துறையைச் சேர்ந்த 2 அதிகாரிகள் மற்றும் சி.ஆர்.பி.எஃப் படையைச் சேர்ந்த 2 வீரர்கள் என மொத்தம் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஹரியானா மாநிலம் ஃபதேஹாபாத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட 23 வயது இளம் பெண்ணுக்கு, கடந்த 20-ஆம் தேதி ஒரு பெண் தோழி மூலம் அறிமுகம் கிடைத்துள்ளது. உ.பி.யின் அம்ரோஹாவில் உள்ள புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, முசாஃபர்நகரைச் சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் இன்ஸ்பெக்டர் மோஹித் என்பவரைச் சந்திக்க அந்தப் பெண் பணிக்கப்பட்டார். இதனை நம்பிய அப்பெண், கடந்த திங்கள்கிழமை அன்று சோனிபட்டில் மோஹிட்டைச் சந்தித்துள்ளார். அங்கு இருந்து அவர்கள் மீரட் சென்றபோது, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் தலைமைக் காவலர் லால்ராம் யாதவ் என்பவரும் இவர்களுடன் இணைந்துகொண்டார்.

Advertisement

பின்னர், காரில் அம்ரோஹாவின் அத்ராசி-ஹசன்பூர் சாலைப் பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டிற்கு அப்பெண்ணை அழைத்துச் சென்றுள்ளனர். வழியில் உ.பி. காவல்துறையின் சார்பு ஆய்வாளர் சஞ்சய் தோமரும் அவர்களுடன் இணைந்துள்ளார். பண்ணை வீட்டில் ஹசன்பூர் காவல்நிலையத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் பிரமோத் உணவு மற்றும் மதுபான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். இரவு நேரத்தில் மோஹித், லால்ராம் யாதவ் மற்றும் சஞ்சய் தோமர் ஆகிய மூவரும் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தொடர்ந்து பிரமோத் வன்கொடுமை செய்ய முயன்றபோது, அப்பெண் அவரை வெளியே தள்ளி கதவை பூட்டிக்கொண்டு, இணைய வழியில் காவல் உதவி எண்ணைக் கண்டறிந்து புகார் அளித்துள்ளார். விரைந்து வந்த காவல்துறையினர் அப்பெண்ணை மீட்டு, குற்றத்தில் ஈடுபட்ட சீருடைப் பணியாளர்கள் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், காவல் துறைக்கே துடைக்க முடியாத கறையை இது ஏற்படுத்தியுள்ளது எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in