LATEST NEWS
“பூண்டு, வெங்காயம் கூட தொட மாட்டோம்..!” வெஜ் பிரியாணி ஆர்டர் செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. உணவக மேலாளரை கதறவிட்ட பெண்.. பரபரப்பு சம்பவம்..!1
சோமாட்டோ செயலியில் ஆன்லைன் மூலமாக ஹைதராபாத் வெஜ் பிரியாணி ஆர்டர் செய்த பெண்ணுக்கு, ‘ட்ரூத்பவுல்’ உணவகத்திலிருந்து சிக்கன் பிரியாணி டெலிவரி செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிற்கு வந்த பிரியாணியைத் தட்டில் பரிமாறிய போதுதான், அது வெஜ் பிரியாணி அல்ல, சிக்கன் பிரியாணி என்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், டெலிவரி பாயிடமிருந்து அந்த உணவகத்தின் எண்ணைப் பெற்றுத் தொடர்பு கொண்டும் அழைப்பு ஏற்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர், நேரடியாக அந்த உணவகத்தின் அலுவலகத்திற்கே சென்று அங்கிருந்த மேலாளரிடம் நியாயம் கேட்டுள்ளார்.
தங்கள் வீட்டில் பூண்டு மற்றும் வெங்காயம் கூடச் சாப்பிடாத தூய சைவக் குடும்பம் என்றும், அத்தகைய தங்களுக்குச் சிக்கன் பிரியாணியை அனுப்பி மத நம்பிக்கையைக் கெடுத்துவிட்டதாகவும் அந்தப் பெண் மேலாளரைச் சாடினார். தனது தவறை ஒப்புக்கொண்ட உணவக மேலாளர், அதற்கான பணத்தை ரீஃபண்ட் செய்வதாகத் தெரிவித்தார். ஆனால், பணத்தைத் தாண்டி வாடிக்கையாளர்களை இவ்வாறு ஏமாற்றுவது தவறு என்றும், ஒருவரின் மத நம்பிக்கையை மற்றும் மதக் கோட்பாடுகளைச் சீர்குலைப்பது சட்டப்படி குற்றமாகும் என்றும் அந்தப் பெண் ஆவேசமாக எச்சரித்தார். ஆன்லைன் மூலமாக உணவுகளை ஆர்டர் செய்யும் போது இதுபோன்ற பல குளறுபடிகள் நடப்பதால், பொதுமக்கள் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
