“Will you marry me..?” சுறா தொட்டிக்குள் முழங்காலிட்ட காதலை காதலன்… காதலியின் ரியாக்ஷனை நீங்களே பாருங்க.. இணையத்தை ஆக்கிரமிக்கும் விசித்திரக் காதல்கதை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“Will you marry me..?” சுறா தொட்டிக்குள் முழங்காலிட்ட காதலை காதலன்… காதலியின் ரியாக்ஷனை நீங்களே பாருங்க.. இணையத்தை ஆக்கிரமிக்கும் விசித்திரக் காதல்கதை..!!

Published

on

பிரிட்டனைச் சேர்ந்த ஜேம்ஸ் வால்ஷ் என்ற வாலிபர், தனது காதலி பேஜ் குக்கிற்குப் பிரம்மாண்டமான சுறா மீன்கள் நீந்திக் கொண்டிருக்கும் தொட்டிக்கு அடியிலேயே காதலை வெளிப்படுத்திய விசித்திரமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் வைரலாகி வருகிறது. லிங்கன்ஷையரில் உள்ள ஸ்கெக்னஸ் அக்வாரியத்தில் செப்டம்பர் 10-ஆம் தேதி இந்த ஜோடி சுறா மீன்களுடன் நீந்தும் ஸ்கூபா டைவிங் சாகசத்திற்குச் சென்றுள்ளது. ஜேம்ஸின் காதலிக்குச் சுறா மீன்கள் என்றால் அசாத்திய பிரியம் என்பதால், வழக்கமான இடங்களைத் தவிர்த்துத் தனது காதலிக்கு மறக்க முடியாத ஒரு அனுபவத்தைக் கொடுக்க ஜேம்ஸ் இந்த விசித்திரமான திட்டத்தைத் தீட்டியுள்ளார்.

இதற்காக அந்த அக்வாரிய ஊழியர்களின் உதவியை நாடிய ஜேம்ஸ், காதலிக்குத் தெரியாமல் ரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவர்கள் இருவரும் ஆழ்கடல் உடைகளுடன் சுறா மீன்கள் சூழ்ந்திருக்கத் தண்ணீருக்கு அடியில் நீந்திக் கொண்டிருந்த போது, ஊழியர்கள் உதவியுடன் “என்னைத் திருமணம் செய்து கொள்வாயா?” என்ற வாசகம் அடங்கிய பலகையை ஜேம்ஸ் திடீரெனக் காட்டியுள்ளார். சுறா மீன்களுக்கு நடுவே ஜேம்ஸ் முழங்காலிட்டுத் தன் காதலைத் தெரிவித்த இந்த எதிர்பாராத நொடிகளைக் கண்டு திகைத்துப்போன குக்கு, தண்ணீருக்கு அடியிலேயே தனது கைகளால் “OK” சைகையைக் காட்டித் திருமணச் சம்மதத்தைத் தெரிவித்தார். தண்ணீருக்கு அடியில் அரங்கேறிய இந்த அசாத்தியமான காதல் கதை இணையவாசிகளின் இதயங்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in