“ஜெயிப்பது ரொம்ப கஷ்டம்..” அருண்ராஜ் நியமனத்தால் கொந்தளித்த செங்கோட்டையன்.. ரிப்போர்ட்டைப் பார்த்து ஷாக்கான முதல்வர் விஜய்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“ஜெயிப்பது ரொம்ப கஷ்டம்..” அருண்ராஜ் நியமனத்தால் கொந்தளித்த செங்கோட்டையன்.. ரிப்போர்ட்டைப் பார்த்து ஷாக்கான முதல்வர் விஜய்..!!

Published

on

தாராபுரம் சட்டமன்றத் தொகுதியின் பொறுப்பாளராக அமைச்சர் அருண்ராஜ் நியமிக்கப்பட்டது, மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கு கடும் மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தலைமையின் முடிவு, சமுதாய ரீதியாகவும் KAS அவர்களுக்குப் பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகக் கோபமடைந்துள்ள அவர், வரவிருக்கும் தேர்தல் தொடர்பான பணிகளில் எவ்வித ஆர்வமும் காட்டாமல் ஒதுங்கியிருப்பதாகத் தெரிகிறது.

மேலும், அவர் தேர்தல் பணிகளில் ஈடுபடாமல் இருப்பதுடன் நிற்காமல், தொகுதியில் முழு மூச்சாக வேலை பார்க்கும் மற்ற நிர்வாகிகளையும் தடுத்து நிறுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் அங்கு கட்சியின் வெற்றி வாய்ப்பு கணிசமாகக் குறையும் என தலைமைக்கு ரகசிய ரிப்போர்ட் அனுப்பப்பட்டுள்ளது. இந்தத் திடீர் அறிக்கையைக் கண்டு கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் கடும் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in