“செத்து மடிந்த மனிதநேயம்..” வலியால் துடித்த வாலிபர்.. காப்பாற்றாமல் மனித மிருகங்கள் சித்த காரியத்தை பாருங்க.. நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த வீடியோ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“செத்து மடிந்த மனிதநேயம்..” வலியால் துடித்த வாலிபர்.. காப்பாற்றாமல் மனித மிருகங்கள் சித்த காரியத்தை பாருங்க.. நெட்டிசன்களை கொந்தளிக்க வைத்த வீடியோ..!!

Published

on

சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூர் பகுதியில் நடந்த இந்தச் சாலை விபத்து, சக மனிதர்கள் மீதான மனிதநேயம் எவ்வாறு செத்து மடிந்துள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு நெஞ்சை பதறவைக்கும் சம்பவமாக அமைந்துள்ளது. விபத்தில் சிக்கிய நபர் ஒருவர் பலத்த காயமடைந்து, வலியால் துடித்தபடி சாலையில் விழுந்து கிடந்துள்ளார். அந்த இக்கட்டான சூழ்நிலையிலும், அங்கு கூடி நின்ற மக்கள் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை; அவசர ஆம்புலன்ஸ் வாகனத்திற்கோ அல்லது உள்ளூர் காவல்துறையினருக்கோ தகவல் கொடுக்கவும் நினைக்கவில்லை. மாறாக, அங்கிருந்த பெரும்பாலான ஆண்கள் தங்களின் செல்போன்களை எடுத்து, அந்த நபர் வலியால் துடிப்பதைக் கொடூரமான முறையில் வீடியோ எடுப்பதிலேயே மும்முரமாக இருந்துள்ளனர்.

காயமடைந்த அந்த நபர், தனக்கு உதவ யாரும் இல்லாததால், அவரே தனது செல்போன் மூலம் தனது நண்பரைத் தொடர்பு கொண்டு உதவிக்கு அழைத்துக் கொண்டிருந்த அந்தக் காட்சி காண்போரைக் கண்கலங்கச் செய்துள்ளது. அருகில் இத்தனை மனிதர்கள் இருந்தும், ஒருவராலும் உதவ முடியாத அளவிற்கு மக்களின் மனசாட்சி மரத்துப் போய்விட்டதை இந்த நிகழ்வு காட்டுகிறது. சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த வீடியோ, மக்களைக் குற்றப்படுத்துவதற்காக அல்லாமல், இனிவரும் காலங்களில் இது போன்ற மனிதாபிமானமற்ற சம்பவங்கள் எங்கும் நடந்துவிடக் கூடாது என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்காக மட்டுமே பகிரப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in