“பள்ளிக்கு அழைத்து செல்ல வந்த மாமா…” ரத்த வெள்ளத்தில் கிடந்த தாய், மகள்…! பூட்டப்பட்ட வீட்டிற்குள் நடந்தது என்ன..? பகீர் சம்பவம்..!! – cinefeeds
Connect with us

CRIME

“பள்ளிக்கு அழைத்து செல்ல வந்த மாமா…” ரத்த வெள்ளத்தில் கிடந்த தாய், மகள்…! பூட்டப்பட்ட வீட்டிற்குள் நடந்தது என்ன..? பகீர் சம்பவம்..!!

Published

on

பஞ்சாப் மாநிலம் படாலா பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் 40 வயது பெண்ணும், அவரது 10 வயது மகளும் வசித்து வந்தனர். கடந்த செப்டம்பர் 26 அன்று காலையில் வழக்கம்போலச் சிறுமியைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக அவரது மாமா தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். நீண்ட நேரம் அழைத்தும் யாருமே போனை எடுக்காததால் சந்தேகமடைந்த அவர், உடனடியாகச் சகோதரியின் வீட்டிற்கு நேரில் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் பிரதான கதவு வெளிப்புறமாகப் பூட்டப்பட்டிருந்ததால் அதிர்ச்சியடைந்து, கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளார்.

வீட்டுக்குள் சென்று பார்த்த உறவினருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. தாயும் அவரது 10 வயது மகளும் கொடூரமான முறையில் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தனர். இச்சம்பவம் குறித்து உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார் தடயங்களைச் சேகரித்து, இருவரின் உடல்களையும் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

போலிஸாரின் முதற்கட்ட விசாரணையில், அப்பெண்ணின் கணவர் கடுமையான போதைப்பொருள்களுக்கு அடிமையானவர் என்றும், இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. கொலைச் சம்பவத்திற்குப் பிறகு வீட்டை வெளிப்புறமாகப் பூட்டிவிட்டு தலைமறைவாகியுள்ள கணவர் மீது பலத்த சந்தேகம் எழுந்துள்ளதால், அவரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in