“உன்கூட பேசணும் வா” என கூப்பிட்ட 2 பெண்கள்.. வீட்டை விட்டு வெளியே வந்த அடுத்த நொடியே பயங்கரம்.. குடும்பத்தின் கண் முன்னே வாலிபர் துடிதுடிக்கக் கொலை..!! – cinefeeds
Connect with us

CINEMA

“உன்கூட பேசணும் வா” என கூப்பிட்ட 2 பெண்கள்.. வீட்டை விட்டு வெளியே வந்த அடுத்த நொடியே பயங்கரம்.. குடும்பத்தின் கண் முன்னே வாலிபர் துடிதுடிக்கக் கொலை..!!

Published

on

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் குடும்பத்தினருடன் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த வாலிபரை, இரண்டு பெண்கள் சினிமா பாணியில் வெளியே வரவழைத்து, மர்மக் கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவல்லிக்கேணி கிருஷ்ணா பேட் பகுதியைச் சேர்ந்த 28 வயதான அஜித் என்ற வாலிபர் ஏர்டெல் நிறுவனத்தில் டெக்னீசியனாகப் பணியாற்றி வந்தார். இவர் சம்பவத்தன்று வீட்டில் தனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டு பெண்கள் தனியாகப் பேச வேண்டும் எனக் கூறி அஜித்தை வீட்டின் வாசலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அஜித்துடன் அந்தப் பெண்கள் பேசிக்கொண்டிருந்த சமயத்தில், திடீரென ஆயுதங்களுடன் வந்த இரண்டு மர்ம நபர்கள் அஜித்தை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் முகம் மற்றும் தலைப் பகுதிகளில் கொடூரமாக வெட்டினர். இதில் படுகாயமடைந்த அஜித் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மகனைக் காப்பாற்ற ஓடிவந்த தந்தை நடராஜன் மற்றும் தாய் சராசம்மாள் ஆகியோரையும் அந்தக் கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளது. இதில் தடுத்துக் காப்பாற்ற முயன்ற தாய் சராசம்மாளின் கையில் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டு, அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement

தகவலறிந்து வந்த ஐஸ் ஹவுஸ் D3 காவல் நிலைய போலீசார் அஜித்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அஜித்தை திட்டமிட்டு ஸ்கெட்ச் போட்டு வெளியே வரவழைத்துக் கொலை செய்திருப்பதால், இதற்குப் பின்னணியில் இருக்கும் முன்பகை அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்குத் துணையாக அஜித்தை வீட்டிலிருந்து அழைத்து வந்த அந்த இரண்டு பெண்கள் யார் என்பது குறித்தும், அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தும் தப்பியோடிய கொலையாளிகளை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in