“காஷ்மீரில் பயங்கரம்.. AK-47 துப்பாக்கியுடன் அலுவலகத்திற்குள் புகுந்து CISF வீரர்..” அடுத்த நொடியே கேட்ட அலறல் சத்தம்.. 4 வீரர்களுக்கு நேர்ந்த கொடூரம்.. பரபரப்பு பின்னணி..!! – cinefeeds
Connect with us

CRIME

“காஷ்மீரில் பயங்கரம்.. AK-47 துப்பாக்கியுடன் அலுவலகத்திற்குள் புகுந்து CISF வீரர்..” அடுத்த நொடியே கேட்ட அலறல் சத்தம்.. 4 வீரர்களுக்கு நேர்ந்த கொடூரம்.. பரபரப்பு பின்னணி..!!

Published

on

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டம் பசோக்லியில் உள்ள சேவா நீர்மின் நிலையத்தில், சி.ஐ.எஸ்.எஃப். வீரர் ஒருவர் தனது சக வீரர்கள் மற்றும் அதிகாரி உள்பட 4 பேரை ஏ.கே. 47 துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளார். இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவ்தேஷ் குமார் சிங் என்ற தலைமைக் காவலர், சுமார் 150 குண்டுகளுடன் அலுவலக கட்டிடத்திற்குள் சென்று இந்த அதிர்ச்சித் தாக்குதலை நடத்தியுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த துணை கமாண்டர் அங்கித் குமார் பாண்டே, சப்-இன்ஸ்பெக்டர் லக்ஸ்மண் சிங், கான்ஸ்டபிள்கள் ரபிக் அகமது மற்றும் சந்தீப் குமார் ஆகியோர் இமாச்சல பிரதேச மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய அவ்தேஷ் குமார் சிங் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டு, இந்த கொடூர செயலுக்கான காரணம் குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in