LATEST NEWS
“இவ்வளவு அழகா இங்கிலீஷ் பேசுறீங்களே.. அப்புறம் ஏன்..?” ஏசி ரூம் IT வேலையை தூக்கிப்போட்டுட்டு ரோட்டுல ஆட்டோ ஓட்டும் பெண்..! பின்னணி காரணம் தெரிஞ்சா கலங்கிடுவீங்க..!!
பெங்களூரில் ஏசி அறையில் பார்த்த நல்ல ஐடி வேலையைத் துறந்துவிட்டு, தெருக்களில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டும் ஒரு பெண்ணின் கதை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. டிஜிட்டல் கிரியேட்டரான தன்வி ஷெட்டி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த இந்த வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த பெண்ணின் தந்தை சமீபத்தில் காலமானதால், அவரது தாய் வீட்டில் தனியாக இருந்தார். ஐடி நிறுவனங்களில் இரவு நேரங்கள் உட்பட நீண்ட நேர ஷிப்ட் வேலை செய்ய வேண்டியிருந்ததால், தாயுடன் செலவிட நேரம் கிடைக்கவில்லை. எனவே, தாயின் தனிமையைப் போக்க மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், அவர் தனது கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டு ஆட்டோ ஓட்டத் தொடங்கினார்.
அவரது ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகள், அவர் மிகவும் சரளமாகவும் நேர்த்தியாகவும் ஆங்கிலம் பேசுவதைக் கேட்டு வியப்படைந்து, “இவ்வளவு நன்றாக ஆங்கிலம் பேசுகிறீர்களே, அப்புறம் ஏன் ஆட்டோ ஓட்டுகிறீர்கள்?” என்று கேட்கிறார்கள். ஆனால் அவர் இந்த கேள்விகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. எந்த வேலையும் சிறியது அல்ல என்று நம்பும் அவர், இந்த வேலையின் மூலம் மன அமைதி கிடைப்பதாகவும், சில சமயங்களில் ஐடி வேலையை விட இதில் நல்ல வருமானம் ஈட்ட முடிவதாகவும் கூறுகிறார்.
https://www.instagram.com/reel/Ddy2dqZsM8E/?utm_source=ig_web_button_share_sheet
பொதுவாக ஆட்டோ ஓட்டுவது ஆண்களுக்கான வேலை என்றே நமது சமூகம் நினைக்கிறது. ஆனால், உறுதியான லட்சியம் இருந்தால் பெண்களால் முடியாதது எதுவுமில்லை என்பதை இந்தப் பெண் நிரூபித்துள்ளார். சமூகத்தின் பயத்தை தூக்கிப் எறிந்துவிட்டு, சொந்த விருப்பத்தின்படி வாழத் தொடங்கியுள்ள இவரை சோஷியல் மீடியாவில் பலரும் பாராட்டி வருகின்றனர். ஒரு மகளின் உண்மையான அன்பையும், சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சலையும் பறைசாற்றும் கதையாக இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
