“என் போனை ஏன் எடுக்கல?” வீடியோ காலிலேயே உயிரை மாய்த்துக் கொண்ட காதலன்… 21 வயது மாணவனின் வாழ்க்கையை முடித்த ஒரு போன் கால்..!! – cinefeeds
Connect with us

CRIME

“என் போனை ஏன் எடுக்கல?” வீடியோ காலிலேயே உயிரை மாய்த்துக் கொண்ட காதலன்… 21 வயது மாணவனின் வாழ்க்கையை முடித்த ஒரு போன் கால்..!!

Published

on

பீகார் மாநிலம் பாட்னாவில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிவந்த பிண்டு குமார் (21) என்ற மாணவர், ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ககாரியா மாவட்டத்தைச் சேர்ந்த இவர், பாட்னாவில் தங்கிப் படித்து வந்துள்ளார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் அவருக்குக் காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால், கடந்த சில நாட்களாக அப்பெண் இவரது தொலைபேசி அழைப்புகளை ஏற்காததால் பிண்டு கடுமையான மன உளைச்சலில் இருந்துள்ளார்.

சம்பவத்தன்று பிண்டு குமார் அந்தப் பெண்ணிற்கு வீடியோ கால் செய்து, ரயில்வே தண்டவாளத்தைக் காட்டி தான் உயிரை மாய்த்துக் கொள்ளப்போவதாகக் கூறியுள்ளார். அதன்பின், ராஜேந்திர நகர் டெர்மினல் மற்றும் குல்சார்பாக் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த ரயில்வே காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், மாணவரின் மொபைல் போன் மற்றும் வீடியோ கால் பதிவுகளை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இறப்பதற்கு முன் எந்தவொரு கடிதமும் கிடைக்காத நிலையில், அப்பெண்ணின் நடத்தையால் மனமுடைந்தே தனது மகன் இந்த முடிவை எடுத்ததாகப் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தப் பெண் உட்படச் சிலரிடம் விசாரணை நடத்தக் காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in