LATEST NEWS
“என்னை எப்பாடியாவது காப்பாத்துங்க..!” 20 வயது பெண்ணுக்கு 65 வயது முதியவருடன் கட்டாயத் திருமணமா..? சமூக ஊடகங்களை உலுக்கிய பகீர் பின்னணி..!!
வங்கதேசத்தில் 20 வயதுடைய இந்துப் பெண் ஒருவரை, 65 வயதுடைய முஸ்லிம் முதியவர் ஒருவருக்குக் கட்டாயத் திருமணம் செய்து வைக்க முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான தகவல் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்னன. அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல முயன்றபோது, அவர் தன்னை காப்பாற்றுமாறு அழுது கொண்டே மக்களிடம் கதறிப் பாடியதாக அந்தப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், இணையத்தில் பரவி வரும் இத்தகைய கட்டாயத் திருமண வீடியோக்களை ஆய்வு செய்த உண்மை கண்டறியும் அமைப்புகள் , சமூக ஊடகங்களில் பரவும் பல வீடியோக்கள் உண்மையான சம்பவங்கள் அல்ல என்றும், அவை விழிப்புணர்வு அல்லது பொழுதுபோக்கு நோக்கத்திற்காக நடிகர்களைக் கொண்டு எடுக்கப்பட்ட ஸ்கிரிப்ட் வீடியோக்கள் என்றும் கண்டறிந்துள்ளன. அதே நேரத்தில், வங்கதேசம் மற்றும் தெற்காசியப் பகுதிகளில் பெண்களின் திருமண ஒப்புதல், கட்டாயத் திருமணங்கள் மற்றும் சிறுமியர் பாதுகாப்பு குறித்த விவாதங்களை இத்தகைய பதிவுகள் தொடர்ந்து இணையத்தில் தீவிரமாக்கி வருகின்றன
