“என்னை மதிக்காமல் மாவட்ட செயலாளரை பார்க்க போவியா..?” தவெக பெண் நிர்வாகி வீட்டிற்கு புகுந்து நகர செயலாளர் அராஜகம்.. விளாத்திகுளத்தில் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“என்னை மதிக்காமல் மாவட்ட செயலாளரை பார்க்க போவியா..?” தவெக பெண் நிர்வாகி வீட்டிற்கு புகுந்து நகர செயலாளர் அராஜகம்.. விளாத்திகுளத்தில் பரபரப்பு..!!

Published

on

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், தமிழக வெற்றிக் கழக பெண் நிர்வாகி தனலட்சுமியை, அக்கட்சியின் நகர செயலாளர் முத்துராமலிங்கசேதுபதி மற்றும் அவரது மனைவி சௌந்தர்யா ஆகியோர் ஆபாசமாகத் திட்டி, செருப்பு மற்றும் விளக்கமாறால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாற்றுக்கட்சியிலிருந்து தவெக-வில் இணைந்த பெண் ஒருவருக்கு, வரவிருக்கும் பேரூராட்சித் தேர்தலில் ‘வார்டு கவுன்சிலர் சீட்’ கேட்டு, நகர செயலாளரான முத்துராமலிங்கசேதுபதியைக் கேட்காமல், மாவட்ட செயலாளர் மகேஸ்வரனிடம் தனலட்சுமி பரிந்துரை செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நகர செயலாளர், “என்னை மதிக்காமல் எப்படி மாவட்ட செயலாளரைப் பார்க்கப் போகலாம்?” என்று செல்போனில் தனலட்சுமியிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்தத் தொலைபேசி விவாதத்தைத் தொடர்ந்து, முத்துராமலிங்கசேதுபதியும் அவரது மனைவியும் தனலட்சுமியின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தனலட்சுமியை ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு, செருப்பை முகத்தில் வீசியும், விளக்கமாறால் அடித்தும் கீழே தள்ளித் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தனலட்சுமி அளித்த புகாரின் பேரில், சனிக்கிழமை இரவு விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் தவெக நகர செயலாளர் முத்துராமலிங்கசேதுபதி மீது பெண்கள் துன்புறுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், தற்போது தலைமறைவாக இருக்கும் அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in