CRIME
பட்டப்பகலில் பயங்கரம்.. நடுரோட்டில் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்த வழக்கறிஞர்.. 3 பேர் கொண்ட மாஃபியா கும்பலின் வெறிச்செயல்.. இணையத்தை உலுக்கும் வீடியோ..!!
பீகார் மாநிலம் கதிஹாரில் வழக்கறிஞர் குட்டு அன்சாரி என்பவர் நகரின் மையப்பகுதியில் பகல் நேரத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படேல் சவுக் அருகேயுள்ள கும்ஹார் டோலி பகுதியில் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. காலை 9 முதல் 10 மணி அளவில் வழக்கறிஞர் குட்டு அன்சாரி சந்தைக்குச் சென்று கொண்டிருந்தபோது, அவரை மூன்று பேர் கொண்ட கும்பல் திடீரென வளைத்துப் பிடித்துள்ளது. அந்த கும்பல் அவரை முதலில் கொடூரமாகத் தாக்கிய பிறகு, மிக அருகில் வைத்து அவரது தலையின் பக்கவாட்டுப் பகுதியில் துப்பாக்கியால் சுட்டுள்ளது. இதில் குட்டு அன்சாரி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பரபரப்பான பகுதியில், அதுவும் பகல் வெளிச்சத்தில் இந்த துணிகரக் கொலை அரங்கேறியுள்ளது. துப்பாக்கியால் சுட்ட பின்னர், கொலையாளிகள் மூவரும் எவ்வித பயமும் இன்றி, காற்றில் துப்பாக்கியால் சுட்டபடியே மிக நிதானமாக நடந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு குறித்த பெரும் அச்சத்தையும், வழக்கறிஞர்கள் மத்தியில் பலத்த கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
