அடப்பாவி.. போனில் கூப்பிட்டும் வராத மனைவி.. ஆத்திரத்தில் மாமியார் வீட்டு வாசலில் கணவன் நடத்திய நள்ளிரவு வெறிச்செயல்.. வைரலாகும் பகீர் வீடியோ..!! – cinefeeds
Connect with us

CRIME

அடப்பாவி.. போனில் கூப்பிட்டும் வராத மனைவி.. ஆத்திரத்தில் மாமியார் வீட்டு வாசலில் கணவன் நடத்திய நள்ளிரவு வெறிச்செயல்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!

Published

on

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்குச் சென்ற மனைவியை சமாதானப்படுத்த முடியாத ஆத்திரத்தில், மாமியார் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 ஸ்கூட்டர்களைக் கணவன் தீயிட்டு கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோத்வாலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த விசித்திரமான விபரீதம் அரங்கேறியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட ஏதோ ஒரு கருத்து வேறுபாடு காரணமாக, மனைவி கோபமடைந்து தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியடைந்த கணவன், அவரைத் தொடர்ந்து தொலைபேசி மற்றும் குறுஞ்செய்திகள் மூலமாகத் தொடர்பு கொண்டு சமாதானப்படுத்த முயன்றுள்ளார். ஆனால், பல நாட்கள் கடந்தும் மனைவி தனது கணவர் வீட்டிற்குத் திரும்ப வர மறுத்து பிடிவாதமாக இருந்துள்ளார். இதனால் பொறுமையிழந்த கணவன், மனைவியின் பெற்றோர் வீட்டிற்கு நேரடியாகச் சென்று அங்கு வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 ஸ்கூட்டர்களுக்குத் தீ வைத்துள்ளார். இச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in